அப்போஸ்தலர்
பரிசுத்த ஆவியின் வருகையும் சபையின் உலகளாவிய பரவலும்:
- பெந்தெகொஸ்தே நாள்: பரிசுத்த ஆவியானவர் பலத்த காற்றைப் போல இறங்கி, அப்போஸ்தலர்கள் அந்நிய பாஷைகளைப் பேச, பேதுருவின் பிரசங்கத்தால் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு சபை துவங்குதல்.
- ஸ்தேவானின் மரணம்: சபைக்கு வந்த துன்புறுத்தல்களும், விசுவாசத்திற்காகக் கல்லெறியப்பட்டு மரித்த முதல் இரத்தசாட்சியாகிய ஸ்தேவானின் உன்னத சாட்சி.
பவுலின் ஊழியப் பயணங்கள்:
- பவுலின் மனமாற்றம்: தமஸ்கு வழியில் இயேசுவைச் சந்தித்து சவுல் பவுலாக மாறுதலும், அந்தியோகியாவிலிருந்து புறப்பட்டுப் புறஜாதிகளுக்குச் சுவிசேஷத்தைக் கொண்டு செல்லுதல்.
- எருசலேம் சங்கம் மற்றும் பவுலின் சிறைச்சாலை: புறஜாதிகள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்ற முடிவு, பவுல் ரோமாபுரி வரை சுவிசேஷத்தைக் கொண்டு செல்லுதல்.
Tamil Bible
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வேதாகமம்